மின்னல் வேக ஸ்டம்பிங்.. பாய்ந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவர்.. 90ஸ் இந்திய அணியின் தரமான விக்கெட் கீப்பர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  மின்னல் வேக ஸ்டம்பிங்.. பாய்ந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவர்.. 90ஸ் இந்திய அணியின் தரமான விக்கெட் கீப்பர்

மின்னல் வேக ஸ்டம்பிங்.. பாய்ந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவர்.. 90ஸ் இந்திய அணியின் தரமான விக்கெட் கீப்பர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 19, 2024 06:30 AM IST

மின்னல் வேக ஸ்டம்பிங் செய்பவராகவும், பாய்ந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவராகவும் தன்னை நிருபித்தவர் நயன் மோங்கியா. 90ஸ் இந்திய அணியின் தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜொலித்துள்ளார்.

மின்னல் வேக ஸ்டம்பிங்.. பாய்ந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவர்.. 90ஸ் இந்திய அணியின் தரமான விக்கெட் கீப்பர்
மின்னல் வேக ஸ்டம்பிங்.. பாய்ந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவர்.. 90ஸ் இந்திய அணியின் தரமான விக்கெட் கீப்பர்

சர்வதேச கிரிக்கெட் பயணம்

குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்த மோங்கிய, அந்த மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டம் வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய அணியில் விளையாடும் வாய்பை பெற்றார்.

முதன் முதலில் இலங்கை அணிக்கு எதிரான உள்ளூர் தொடரில் அறிமுகமானார். 1990களில் இந்திய அணியின் விக்கெட் வெற்றிகரமான கீப்பராக வலம் வந்த கிரண் மோர் ஓய்வுக்கு பின்னர், அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை நிரப்பினார்.

ஆரம்பத்தில் பேட்டிங்கை விட கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரணியினர் கூட இவரது திறமை பற்றி பேசும் அளவுக்கு புகழ் பெற்றார் மோங்கியா. இதனால் விளைவாக அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் லிஸ்டிலும் இணைந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கெத்து பேட்டிங்

1996இல் இந்தியா சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரிலேயாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஓபனராக மோங்கியா புரொமோட் செய்யப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட மோங்கியா, கீப்பங்கை போல் பேட்டிங்கும் தனக்கு கை வந்த கலை தான் என்பதை நிருபித்தார்.

மிகவும் மெதுவாகவும், குறைவான பவுன்ஸுமாக பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்த விக்கெட்டில் கெத்தாக பேட்டிங் செய்த மோங்கிய முதல் டெஸ்ட் சதம் அடித்ததோடு, 152 ரன்கள் அடித்து மிரட்டினார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஒரே சதமாகும்.

அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை 1996, 1999 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 1990 காலகட்டத்தில் இந்திய வென்ற பிரபல முத்தரப்பு தொடர்களான டைட்டன் கோப்பை, சிங்கர் ஆகாய் கோப்பை, ஷார்ஜாவில் நடைபெற்ற கோக கோலா கோப்பை போன்ற தொடர்களில் இடம்பிடித்த வீரராக இருந்துள்ளார். மிக முக்கியமாக இந்தியாவின் வெற்றிக்கும் தனது அபார கீப்பிங்கால் பங்களிப்பு அளித்துள்ளார்.

மின்னல் வேக ஸ்டம்பிங்

தோனிக்கு முன்னரே மின்னல் வேக ஸ்டம்பிங், பறந்து, பாய்ந்து கேட்ச்களை பிடிக்கும் இந்த விக்கெட் கீப்பராக பெயர் பெற்றவர் நயன் மோங்கியா. இந்தியா வெற்றி பெற்ற பல்வேறு போட்டிகளில் மோங்கியா தனது பேட்டிங்கை விட விக்கெட் கீப்பிங்கில் அதிக பங்களிப்பை அளித்துள்ளார். இதன் காரணமாகவே பேட்டிங்கில் பெரிதாக இவர் சோபிக்காத போதிலும் அடுத்த விக்கெட் கீப்பர் ஆப்ஷனை பற்றியே இந்திய அணி நிர்வாகம் பெரிதாக கவனம் கொள்ளாமல் இருந்தது.

ஒரே போட்டியில் 5 கேட்களை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை மோங்கியா தான் முதன் முதலில் பெற்றார். இவரது இந்த சாதனையை பின்னர் தோனி மட்டுமே நான்கு முறை நிகழ்த்தியுள்ளார். 

பயிற்சியாளர், சூதாட்ட சர்ச்சை

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். கீப்பிங்கில் எந்த குறையும் செய்திராத மோங்கியா, பேட்டிங்கில் வேண்டுமென்றே மெதுவாக ஸ்கோர் செய்து இந்திய அணி தோல்வி அடைய காரணமாக இருந்துள்ளார் என கூறப்பட்டது.

தன மீதான இந்த குற்றச்சாட்டை மோங்கிய மறுத்தார். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீக்கப்பட்டன. பின் அணிக்கு மீண்டும் திரும்பிய மோங்கியா விளையாடிய கடைசி போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2001இல் கொல்கத்தாவில் நடைபெற்ற புகழ் பெற்ற டெஸ்ட் போட்டியாகும்.

இதைத்தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட மோங்கியா, 2004இல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். அதன் பிறகு தாய்லாந்து, மலேசியா கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பாட்டார். மோங்கிய கிரிக்கெட் விளையாடி காலகட்டத்தில் பிடித்த கேட்ச்கள், ஸ்டம்பிங் எண்ணிக்கை அப்போது இந்திய விக்கெட் கீப்பர் ஒருவராக நிகழ்த்தப்பட்ட சாதனையாக பார்க்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடிய தரமான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்த நயன் மோங்கியாவுக்கு இன்று பிறந்தநாள்

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.