Suryakumar equals Kohli Record: 63 போட்டிகளிலேயே கோலியின் உலக சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
56 சர்வதேச டி20 போட்டிகளிலேயே கோலியின் உலக சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ், இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

கோலியை விட 56 போட்டிகள் குறைவாக விளையாடியிருக்கும் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் அவரது சாதனையை சமன் செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் சாதனை
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இவரது சிறந்த இன்னிங்ஸ்குக்காக ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
அதாவது டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்களில் கோலியுடன் இணைந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இதில் முக்கிய விஷயமாக கோலியை விட 56 போட்டிகள் குறைவாக விளையாடியிருக்கும் சூர்யகுமார் இதை சாதித்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகள் விருதுகளை வென்ற வீரர்களின் லிஸ்ட் இதோ
- சூர்யகுமார் யாதவ் - 16 (69 போட்டிகளில்)
- விராட் கோலி (இந்தியா) - 16 (125 போட்டிகளில்)
- சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) - 15 (91 போட்டிகளில்)
- விரந்தீப் சிங் (மலேசியா) - 14 (78 போட்டிகளில்)
- முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 14 (129 போட்டிகளில்)
- ரோஹித் சர்மா (இந்தியா) - 14 (159 போட்டிகளில்)
புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ்
இந்த மாத தொடக்கத்தில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஏற்கனவே சொன்னது போல் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் தனது பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார்.
அதைப்போல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மா, ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் சூர்யகுமார் யாதவ்.
டி20 ஸ்பெஷலிஸ்ட் சூர்யகுமார்
360 டிகிரியிலும் ரன் வேட்டை நிகழ்த்தி, தனது அதிரடியான ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர் சூர்யகுமார் யாதவ். டி20 ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் இவர் பல போட்டிகளில் திருப்புமுனை ஏற்படுத்தி எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பேட்ஸ்மனாக இருந்து வந்துள்ளார்.
இதுவரை 70 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2424 ரன்கள் அடித்துள்ளார். 43.28 சராசரி வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவ் 4 சதம், 20 அரைசதங்கள் அடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட் பேட்ஸ்மேன்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் தற்போது 169.15 என உள்ளது. ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீர்ரகளின் லிஸ்டில் 1164 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்