இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளி.. வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போட்டி! இங்கிலாந்தில் சுவாரஸ்யம்
இரவு 8.15 மணிக்கு சுளீரென தாக்கிய சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து வீரர்களை பாதுகாக்கும் விதமாக இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் போட்டி நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட்டில் பிரபல கிளப்களின் ஒன்றான குளுசெஸ்டர்ஷையர் வெயில் தாக்கம் காரணமாக ஆட்டத்தை நிறுத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சூரிய ஒளி பேட்ஸ்மேன்களின் கண்களை பதம் பார்க்காமல் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பு கருது போட்டியை நிறுத்தியதாக தெரிவித்துள்ளது.
சூரிய ஒளியால் நிறுத்தப்பட்ட போட்டி
180 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், பல்வேறு காரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டதிருப்பதை கண்டிருப்போம். இதில் பெரும்பாலான போட்டிகள் மழை காரணமாக நிறுத்தப்படுவதென்பது வாடிக்கையான விஷயம் தான்.
ஆனால் வலுவான சூரிய ஒளி காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? புதன்கிழமை கேன்டர்பரியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் கென்ட் ஸ்பிட்ஃபயர்ஸ் vs க்ளுசெஸ்டர்ஷையர் இடையேயான தெற்கு குழு டி20 பிளாஸ்ட் போட்டியின் போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.