Match Fixing: மேட்ச் பிக்சிங் சர்ச்சை..! ஐசிசி நடத்தை விதிமீறல் - அறிக்கை தர தவறிய இலங்கை ஸ்பின்னர் மீது குற்றச்சாட்டு
இலங்கை அணியை சேர்ந்த 25 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரமாவிடம், போட்டியை பிக்சிங் செய்ய அனுகியதாக கூறப்படும் விவகாரத்தில் அவர் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிக்கை அளிக்கத் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நிருபணம் ஆனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படலாம்.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமா மீது ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, இதில் மேட்ச் பிக்ஸிங் அணுகுமுறையை தாமதமின்றி தெரிவிக்கத் தவறியது, ஆதாரங்களுக்கு இடையூறு விளைவித்தது ஆகியவை அடங்கும்.
25 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரம, சர்வதேச போட்டிகள் மற்றும் 2021ஆம் ஆண்டில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளை பிக்சிங் செய்வதற்காக தன்னை அனுகியது தொடர்பாக ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிக்கை அளிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐசிசி தனது இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், "இலங்கை பந்துவீச்சாளர் ஊழல் நடவடிக்கைகளுக்கான அணுகுமுறை தொடர்பான செய்திகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 6 முதல் பதிலளிக்க அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.