Srilanka Cricket: அரசின் தலையீடு..! இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அதிரடி
அரசின் தலையீடு இருப்பதாக கூறி இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ஐசிசியின் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகத்தில் அரசாங்கத்தின் விரிவான தலையீடு காரணமாக, ஐசிசி இடைநீக்கம் செய்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருகிறது.
ஐசிசி வாரியம் சார்பில் நடைபெற்ர கூட்டத்தில, ஐசிசி உறுப்பினராக இருந்து வரும் இலங்கை அதன் கடமைகள், விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும். அதன் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கத்தின் நிபந்தனைகள் ஐசிசி வாரியத்தால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் காலாண்டு கூட்டம்நவம்பர் 18 முதல் 21 தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விவகாரம் தொடர்பாக முடிவு செய்யும் என தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்