மேட்ச் பிக்ஸிங்..ஊழல் குற்றச்சாட்டு.. தென் ஆப்பரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 3 பேர் கைது
மேட்ச் பிக்ஸிங் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தென் ஆப்பரிக்காவின் மூன்று முன்னாள் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவராகவும், தனது அச்சுறுத்தலான பவுலிங்கால் எதிரணியை திணறடித்தவராகவும் இருந்துள்ளார்.

மேட்ச் பிக்ஸிங்..ஊழல் குற்றச்சாட்டு தென் ஆப்பரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 3 பேர் கைது (Getty Images)
2015-16 ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் மேட்ச் பிக்சிங் ஊழல் தொடர்பாக முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களான, லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சட்டம், 2004, ஊழல் நடவடிக்கைகள் தடுப்பு மற்றும் எதிர்த்துப் போராடுதல் சட்டத்தின் பிரிவு 15 இன் கீழ் இந்த மூவர் மீதும் ஐந்து குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு
உள்நாட்டு டி20 போட்டியின் போது, இந்தியாவை சேர்ந்த புக்கிகளுடன் இணைந்து போட்டிகளை பிக்சிங் செய்யும் கையாளும் முயற்சியில் மேற்கூறிய வீரர்கள் ஈடுபட்டதாக இந்தக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.