SA vs USA, Super 8: ஒரே ஓவரில் 3 சிக்ஸருடன் விரட்டி வந்த யுஎஸ்ஏ! ரபாடா வீசிய மாயஜால ஓவர் - எஸ்கேப் ஆன தென் ஆப்பரிக்கா
ஒரே ஓவரில் 3 சிக்ஸருடன் வெற்றிக்கான இலக்கை எட்டும் தூரத்தில் விரட்டி வந்த யுஎஸ்ஏ, ரபாடா வீசிய மாயஜால ஓவரில் வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் எஸ்கேப் ஆன தென் ஆப்பரிக்கா வெற்றியை தன் வசமாக்கியது.

ரபாடா வீசிய மாயஜால ஓவரால் எஸ்கேப் ஆன தென் ஆப்பரிக்கா (PTI)
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. தொடர்ந்து 41வது போட்டியாகவும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியாகவும் குரூப் 2 பிரிவில் தென் ஆப்பரிக்கா - யுஎஸ்ஏ அணிகளுக்கு இடையே நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.
தென்ஆப்பரிக்கா ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஎஸ்ஏ கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஓபனராக களமிறங்கிய குவன்டைன் டி காக் 74, ஐடன் மார்க்ரம் 46, ஹென்ரிச் கிளாசன் 36, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்கள் அடித்தனர்.
யுஎஸ்ஏ பவுலர்களில் செளரப் நேட்ரவால்கர், ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.