Shafali Verma: அதிவேக இரட்டை சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை - ஷெபாலி வர்மாவின் ருத்ர தாண்டவம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Shafali Verma: அதிவேக இரட்டை சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை - ஷெபாலி வர்மாவின் ருத்ர தாண்டவம்

Shafali Verma: அதிவேக இரட்டை சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை - ஷெபாலி வர்மாவின் ருத்ர தாண்டவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 28, 2024 04:57 PM IST

அதிவேக இரட்டை சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை புரிந்திரு்கும் ஷெபாலி வர்மா ருத்ர தாண்டவ ஆட்டத்தை தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிவேக இரட்டை சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனைபுரிந்த ஷெபாலி வர்மா ருத்ர தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
அதிவேக இரட்டை சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனைபுரிந்த ஷெபாலி வர்மா ருத்ர தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர் (PTI)

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் மோதிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பரிக்கா பவுலிங்

இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட் செய்த இந்தியா மகளிர் அணிக்கு மிகப் பெரிய தொடக்கத்தை ஓபனர்களான ஷெபாலி வர்மா - ஸ்மிருத்தி மந்தனா ஆகியோர் தந்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 51.6 ஓவர்களில் 292 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் விக்கெட்டாக அவுட்டான ஸ்மிருத்தி மந்தனா 149 ரன்கள் அடித்தார்.

ஷெபாலி அதிவேக இரட்டை சதம்

டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் வெள்ளை பந்து கிரிக்கெட் போல் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ஓபனரான ஷெபாலி வர்மா. தென் ஆப்பரிக்கா மகளிர் பந்து வீச்சை பவுண்டரி, சிக்ஸர்கள் என விரட்டிய ஷெபாலி அதிவேக இரட்டை சமமடித்து சாதனை புரிந்தார்.

20 வயதாகும் ஷெபாலி 194 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே இது அதிவேக இரட்டை சதம் என்ற சாதனையாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா மகளிர் அணி பேட்டரான ஆனபெல் சதர்லாண்ட், இதே தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக 248 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இதுவே மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதமாக இருந்த நிலையில், தற்போது இந்திய மகளிர் அணியின் இளம் பேட்டரான ஷெபாலி அதை முறியடித்துள்ளார்.

ஷெபாலி மற்றொரு சாதனை

இந்த போட்டியில் இரட்டை சதமடித்திருக்கும் ஷெபாலி மற்றொரு சாதனையும் புரிந்துள்ளார். அதாவது இந்திய மகளிர் அணிக்காக இரட்டை சதமடித்த இரண்டாவது பேட்டர் என்ற மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

22 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக டவுன்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய மகளிர் கேப்டனான மிதாலி ராஜ் 214 ரன்கள் 407 பந்துகளில் அடித்திருந்தார். அதுவே இந்திய மகளிர் அணிக்காக அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதமாகவும், ஒரே இரட்டை சதமாகவும் இருந்து வந்தது.

ஷெபாலி தனது இன்னிங்ஸில் 197 பந்துகளில் 205 ரன்கள் எடுத்து துர்தஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் தனது இன்னிங்ஸில் 23 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்தார்.

மகளிர் கிரிக்கெட் அதிக ரன்கள் அடித்த பேட்டராக பாகிஸ்தான் பேட்டர் கிரண் பலோச் உள்ளார். இவர் 2004இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 242 ரன்கள் அடித்திருப்பதே மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டரால் அடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

தற்போது ஷெபாலி அடித்திருக்கும் 205 ரன்கள் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் அடித்திருக்கும் 7வது பெரிய ஸ்கோராக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.