பேட்டிங் சொர்க்கபுரி..துவம்சம் செய்த சாம்சன்,திலக் வர்மா ஜோடி - டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!ரன் மழையுடன் சாதனை மழை
பேட்டிங் சொர்க்கபுரியான ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் வைத்து தென் ஆப்பரிக்கா பவுலர்கள் துவம்சம் செய்த சாம்சன், திலக் வர்மா ஜோடி, 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து. அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்து புதிய வரலாறு படைத்திருக்கும் இந்தியா ரன் மழையுடன் சாதனை மழை பொழிந்துள்ளது

பேட்டிங் சொர்க்கபுரி..துவம்சம் செய்த சாம்சன்,திலக் வர்மா ஜோடி - டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!ரன் மழையுடன் சாதனை மழை (AFP)
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது தேர்வு சரி என்பதை நிருபிக்கும் விதமாக இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது.