தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Gt Innings Break: ஆட்டம் கண்ட பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்..! 4 விக்கெட்டுகளை தூக்கிய தமிழ்நாடு வீரர் சாய் கிஷோர்

PBKS vs GT Innings Break: ஆட்டம் கண்ட பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்..! 4 விக்கெட்டுகளை தூக்கிய தமிழ்நாடு வீரர் சாய் கிஷோர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 21, 2024 09:27 PM IST

PBKS vs GT Innings Break: அற்புதமான சுழல் பந்து வீச்சால் பஞ்சாப் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்த குஜராத் டைட்டன்ஸ் ஸ்பின்னரான தமிழக வீரர் சாய் கிஷோர் முக்கியமான கட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். பஞ்சாய் டெயிலண்டர் ஹர்ப்ரீத் பிரார் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பினிஷிங் கொடுத்தார்.

விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோரை பாராட்டும் சக குஜராத் டைட்டன்ஸ் வீர்ரகள்
விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோரை பாராட்டும் சக குஜராத் டைட்டன்ஸ் வீர்ரகள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே குஜராத் டைட்டன்ஸ் பதிலடி கொடுக்க காத்திருக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது.

இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. அதிலும் பஞ்சாப் கிங்ஸ் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.

பஞ்சாப் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது.

அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்ப்ரீத் பிரார் 29, சாம் கரன் 20 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருக்கு அடுத்தபடியாக மோகித் ஷர்மா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

நல்ல ஓபனிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஓபனர்களாக பேட் செய்த பிரப்சிம்ரன் சிங், அணியின் கேப்டனாக செயல்பட்ட சாம் கரன் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்தனர். பிரப்சிம்ரன் சிங் 35, சாம் கரன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானர்கள்.

சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள்

மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த ரிலீ ரோசவ் 9 ரன்னில் அவுட்டனார். இதன் பின்னர் ஜித்தேஷ் ஷர்மா 13, லியம் லிவிங்ஸ்டன் 6, சஷாங் சிங் 8, அசுடோஷ் ஷர்மா 3 என அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

பஞ்சாப் மிடில் ஆர்டரில் பலமாக செயல்பட்டு நல்ல பார்மில் இருந்து வந்த சஷாங் சிங், அசுடோஷ் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை தமிழக வீரர் சாய் கிஷோர் வீழ்த்தினார். மொத்தம் அவர் 4 விக்கெட்டுகளை தூக்கினார். மற்ற ஸ்பின்னர்களான நூர் அகமது 2, ரஷித் கான் 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள். குஜராத் ஸ்பின்னர் மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

ஹர்ப்ரீத் பிரார் பினிஷ்

இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஹர்ப்ரீத் சிங், நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 19 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் அதிரடியான பினிஷ் கொடுத்த ஹர்ப்ரீத் பிரார் 12 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார். இதனால் பஞ்சாப் ஸ்கோரும் சற்று உயர்ந்தது.

கடந்த போட்டிகளில் பஞ்சாப்புக்கு ஓபனிங் சரியில்லாமல் இருந்த நிலையில், இந்த போட்டியில் அது சரியாக அமைந்தது. ஆனால் பலமாக இருந்து வந்த மிடில் ஆர்டர் பேட்டிங் சரிந்தது. குஜராத் டைட்டன்ஸ் ஸிபின்னர்கள் சமாளிக்க முடியாமல் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் கண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point