Sachin Tendulkar: 11 ஆண்டுகளுக்கு முன்பே கோலி சாதனையை கணித்த சச்சின் டெண்டுல்கர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Sachin Tendulkar: 11 ஆண்டுகளுக்கு முன்பே கோலி சாதனையை கணித்த சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar: 11 ஆண்டுகளுக்கு முன்பே கோலி சாதனையை கணித்த சச்சின் டெண்டுல்கர்

Manigandan K T HT Tamil
Nov 06, 2023 04:06 PM IST

11 ஆண்டுகளுக்கு முன்பே விராட் கோலி குறித்து லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

விராட் கோலியும் சச்சின் டெண்டுல்கரும் உரையாடுகிறார்கள்.
விராட் கோலியும் சச்சின் டெண்டுல்கரும் உரையாடுகிறார்கள். (REUTERS)

“விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா பற்றி சச்சின் டெண்டுல்கர் 2012 ஆம் ஆண்டிலேயே இவ்வாறு கணித்திருந்தார்” என இஷான் ஜோஷி ஒரு பயனரால் X இல் பகிரப்பட்ட வீடியோவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. வீடியோவில், சல்மான் கான் டெண்டுல்கரிடம் தனது சாதனையை முறியடிக்கும் திறன் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர் பற்றி கேட்கிறார். 

அக்டோபர் 11 ஆம் தேதி நடந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கரின் பழைய வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வீடியோ நவம்பர் 2 ஆம் தேதி பகிரப்பட்டது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 68,000 பார்வைகளைக் குவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வீடியோ ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துகளை குவித்துள்ளது. ஒரு சிலர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வீடியோவின் கருத்துப் பகுதிக்குச் சென்றனர்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த பழைய வீடியோவை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது இங்கே:

“அப்போது நான் அந்தக் கருத்தைப் பார்த்து சிரித்தேன். ஆனால் இந்த மனிதனுக்கு கிரிக்கெட் பற்றி எவ்வளவு அறிவு இருக்கிறது என்று இப்போது எனக்குத் தெரிகிறது” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், "ஆம் ஒரு லெஜண்ட்டுக்கு நபருக்கு எதிர்காலம் தெரியும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

"கௌதம் கம்பீர் ஒருமுறை கூறினார்: 'ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக ஆகவில்லை என்றால், அது இந்தியாவின் இழப்பு, ரோஹித்துக்கு அல்ல'," என்று குறிப்பிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.