Sachin Tendulkar: இதையும் சீக்கிரமா முடிங்க! நய்யாண்டி டுவிட் பதிவுடன் கோலிக்கு, சச்சின் வாழ்த்து
ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் என்கிற தனது சாதனைய சமன் செய்திருக்கும் விராட் கோலிக்கு, நாய்யாண்டி தனத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் கோலி தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி வரை பேட் செய்த அவர் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சதத்தின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்த பேட்ஸ்மேன்களில் சச்சின் டென்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
விராட் கோலிக்கு இன்று 35வது பிறந்தாநாள். இதையடுத்து பிறந்தநாளில் அவர் சாதனை சதமடித்தது மற்றொரு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. மிகவும் குறைவான இன்னிங்கிஸில் இதை நிகழ்த்தியிருக்கும் கோலிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், " சிறப்பாக விளையாடியுள்ளீர்கள் விராட். நான் 49 முதல் 50க்கு செல்ல 365 நாள்கள் தேவைப்பட்டது (49 வயது முதல் 50 வயதுக்கு). ஆனால் நீங்கள் 49இல் இருந்து 50ஐ இன்னும் சில நாள்களில் சென்று எநது சாதனையை முறியிடிப்பீர்கள்" என்று நய்யாண்டி செய்து கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆடுகளம் பேட் செய்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது. நல்ல தொடக்கம் எங்களுக்கு அமைந்தது. நான் களமிறங்கியபோது ரன் வேகத்தை நிலைத்திருக்க வைக்கும் வேலையை செய்தேன். ஆனால் 10 ஓவர்களுக்கு பிறகு பந்து நன்றாக கிரிப்பாகியதால் ஆடுகளம் மெதுவாக செயல்பட்டது. அப்போது நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடிவு செய்தேன். எனக்கு சரியான தகவல் பரிமாற்றமும் அளிக்கப்பட்டது. ஷரேயாஸ் பந்தை சிறப்பாக அடித்து விளையாடினார்.
நாங்கள் 326 ரன்கள் வரை ஸ்கோர் செய்வோம் என எதிர்பார்க்கவில்லை. ஆசிய கோப்பைக்கு முன்னர் நல்ல பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதால் நானும், ஷ்ரேயாஸ் ஐயரும் ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த சிரமமும் இன்றி பேட் செய்தோம்.
இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. எனது பிறந்தநாளில் சதமடிப்பது என்பது கனவாக இருந்து வந்தது. இந்த தருணத்தை நிகழ்ந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்." என்றார்.
விராட் கோலி இந்த சாதனையை தனது 289வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார். சச்சினை விட 173 போட்டிகளுக்கு முன்னரே இதை நிகழ்த்தி தனித்துவ சாதனை நிகழ்த்தியுள்ளார் கோலி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்