Rohit Sharma : இன்று ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் ஷர்மா? அஜித் அகர்கருடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல்!
Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு தலைவர் (அஜித் அகர்கர்) அவருடன் அவர் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது.

Rohit Sharma : கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வழிநடத்திய பின்னர், ரோஹித் சர்மா டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், மேலும் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் அதே முடிவை எடுத்தனர். பி.டி.ஐ அறிக்கையின்படி, வரவிருக்கும் இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோஹித் ஷர்மா தனது ஒருநாள் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோஹித்தின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு தலைவர் (அஜித் அகர்கர்) அவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் ஒருநாள் ஓய்வு குறித்து ஷுப்மன் கில்
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரோஹித்தின் ஒருநாள் எதிர்காலம் குறித்து சுப்மன் கில்லிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘டிரெஸ்ஸிங் ரூமில் அல்லது என்னுடன் இது பற்றி எந்த விவாதமும் இல்லை - ரோஹித் பாய் கூட நம் அனைவரையும் போலவே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திப்பார். அதனால், இப்போது அப்படி எதுவும் இல்லை,’’ என்றார்.
