ஐபிஎல் 2025: ஒரேயொரு அபார இன்னிங்ஸ்.. ஐந்து வெவ்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா! என்னன்னு பாருங்க
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா அபார இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா ஐந்து புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2025இல் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா அபாரமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். முல்லன்பூர் மைதானத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் அபார இன்னிங்ஸ்
அவரது அற்புதமான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி 228 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றது. இந்த இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
தனது அற்புதமான ஆட்டத்துக்காக ஹிட்மேன் ரோஹித்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ரோஹித் ஒன்று அல்லது இரண்டு அல்ல, 5 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.