Rinku Singh: 'அந்த சிக்ஸரை எப்படி பாஸ் அடிச்சீங்க?'-ரகசியம் பகிர்ந்த ரிங்கு சிங்
பிசிசிஐ.டிவியில் ஜிதேஷ் ஷர்மாவுடன் ரிங்கு சிங் பேசினார். அப்போது, துவர்ஷூயிஸின் பந்துவீச்சில் இவ்வளவு அபாரமான சிக்ஸரை அடிக்க இவ்வளவு சக்தியை எப்படி உருவாக்கினார் என்று ரிங்குவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ரிங்கு சிங் (ANI Photo) (BCCI-X)
ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியாவின் அதிரடி வீரர் ரிங்கு சிங் தனது 100 மீட்டர் சிக்ஸரின் ரகசியத்தை பகிர்ந்து கொண்டார்.
ராய்ப்பூரில் நடந்த நான்காவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்தது. இதையடுத்து, இந்திய அணி 174/9 ரன்களை குவித்தது. ரிங்கு சிங் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். இன்னிங்ஸின் 13வது ஓவரில் அதிகபட்ச சிக்ஸர் ஒன்றை அவர் அடித்தார். அவர் அந்த சிக்ஸரை 100 மீட்டர் தொலைவுக்கு விளாசினார்.