Pat Cummins: மிகப் பெரிய கூட்டத்தை நிசப்தம் ஆக்குவது போன்ற கிக் வேறு எதிலும் கிடையாது - கம்மின்ஸ் பேச்சு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Pat Cummins: மிகப் பெரிய கூட்டத்தை நிசப்தம் ஆக்குவது போன்ற கிக் வேறு எதிலும் கிடையாது - கம்மின்ஸ் பேச்சு

Pat Cummins: மிகப் பெரிய கூட்டத்தை நிசப்தம் ஆக்குவது போன்ற கிக் வேறு எதிலும் கிடையாது - கம்மின்ஸ் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 18, 2023 05:53 PM IST

எங்களை நோக்கி எதை எறிந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மிகப் பெரியை கூட்டத்தை சத்தத்தை அமைதியாக்குவது தவிர வேறு கிக் எதில் உள்ளது என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்

2003க்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதையடுத்து போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் யாருக்கு சாதமாக இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:

"நான் ஆடுகளத்தை சிறப்பாக கணிப்பவர் இல்லை, ஆனால் அது மிகவும் உறுதியாக உள்ளது. எனவே நல்ல விக்கெட் போல் தெரிகிறது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஆடுகளம் என்று நினைக்கிறேன்.

பிட்ச் பற்றி கருத்து சொல்வது கடினம். இரு அணிகளுக்கும் ஒரே பிட்ச் தான். சொந்த மண்ணில் விளையாடுவதால் பல்வேறு சாதகங்களில் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்களும் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். எனவே கடைசி வரை காத்திருந்து பார்க்கலாம்.

அனைத்து மைதானங்களிலும் எங்களை பொறுத்தவரை டாஸ் முக்கிய விஷயமாக இருந்ததில்லை. எனவே எங்களை நோக்கி எறியப்படும் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சில திட்டங்கள் இருக்கிறது. அதை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

விளையாட்டில், ஒரு மிகப்பெரிய கூட்டத்தினரை அமைதியாக்குவதை தவிர திருப்தியான விஷயம் வேறு எதுவும் இருக்காது. எங்களது இலக்கு அதுவாகத்தான் இருக்கும்"

இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.