18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பை.. ஆர்சிபி போல் நீண்ட நாள் கோப்பை வெல்லாமல் இருக்கும் உலக அணிகள் தெரியுமா?
ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான காத்திருப்பை ஆர்சிபி முடிவுக்குக் கொண்டு வந்தது, ஆனால் விளையாட்டு உலகில் ஆர்சிபி போல் நீண்ட காத்திருப்புடன் பெரியகோப்பை வெற்றிக்காக இருந்து வரும் சில பிரபல அணிகள் பற்றி பார்க்கலாம்
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டு அணிகளும் தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்துக்காக 18 ஆண்டுகள் காத்திருந்தன. ஆனால் பைனலுக்கு தகுதி பெற்ற பஞ்சாப் கிங்ஸுடன் ஒப்பிடும்போது, முதல் பட்டம் என்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எப்போதும் உணரப்பட்டது.
இதுவரை பட்டத்தை வெல்லாத ஆர்சிபி அணி, ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் பிரகாசமான பேட்டிங், பவுலிங், பீல்டிங் என முழுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. இது தவிர அந்த அணியின் தோல்வியிலும் உடன் இருந்த விசுவாசமான ரசிகர் பட்டாளம் இருந்தது. இவை ஆர்சிபியின் காத்திருப்புக்கு பதிலாக, இந்த ஆண்டில் சிறந்த ஆட்டத்தின் மூலம் முதல் கோப்பை என்ற கனவை நனவாக்கியது.
ஐபிஎல்லில் ஆர்சிபி: 18 ஆண்டுகள்
இந்த வருடத்துக்கு முன்பு, ஐபிஎல்லின் முந்தைய 17 சீசன்களில் ஆர்சிபியின் சாதனை 7 அரையிறுதி/பிளேஆஃப் போட்டிகள் மற்றும் மூன்று இறுதிப் போட்டிகள் என்று இருந்தன. அந்த அணியின் உள்ளூர் மைதானமான சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்காகன பிரத்யேக மைதானமாகவே உருவாக்கப்பட்டது. தட்டையான பிட்ச்கள் மற்றும் சிறிய பவுண்டரிகளுடன்.