ஐபிஎல் 2025: சிஎஸ்கே மோசமான பீல்டிங் வேதனை அளிக்கிறது.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - அம்பத்தி ராயுடு
ஐபிஎல் 2025: மோசமான பீல்டிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் முதல் போட்டியில் எதிரி அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் மற்றொரு எதிரி அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 17 ஆண்டுகள் கழித்து தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. மோசமான பீல்டிங் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்திருப்பதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டத்தில், இரு அணிகளும் களத்தில் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பீல்டிங்கில் சிறந்து விளங்கிய ராஜஸ்தான் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டது. ஆனால், சிஎஸ்கே அணி அதை செய்ய தவறியது எனவும் ராயுடு தெரிவித்துள்ளார்.