Ravichandran Ashwin: அடுத்தடுத்த விக்கெட்டுகள்! மற்றொரு கும்ப்ளேவின் சாதனை முறியடிப்பு - அஸ்வின் வேற லெவல் பவுலிங்
அடுத்தடுத்து புதிய மைல்கல்லையும், பழைய சாதனைகளையும் நிகழ்த்தி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளேவின் மற்றொரு சாதனையை முறியடித்து.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 307 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழக்க, இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய பேட்ஸ்மேன்கள் இளம் வீரர் துருவ் ஜுரல் 90, ஜெயஸ்வால் 73 ரன்கள் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் ஓபனிங் பேட்ஸ்மேன் பென் டக்கெட் 15, அவரை தொடர்ந்து வந்த ஆலி போப் 0 ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து தூக்கினார் இந்திய ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின்.
அஸ்வின் சாதனை
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலரான அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராக இருந்து வருகிறார் கும்ப்ளே. அவர் 132 டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கும் நிலையில், 63 டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடியிருப்பதுடன், மொத்த விக்கெட்டுகளில் 350 விக்கெட்டுகளை இந்தியாவில் தான் எடுத்துள்ளார்.
நீண்ட நாள்களாக கும்ப்ளே வசம் இருந்த இந்த சாதனையை முறியடித்திருக்கும் அஸ்வின், தற்போது வரை 352 விக்கெட்டுகளை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் தற்போது 99வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இதில் 59 போட்டிகள் உள்ளூரில் எடுத்துள்ளார். அஸ்வின் தற்போது வரை 504 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அனில் கும்ப்ளேவின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையையும் அஸ்வின் முறியடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இங்கிலாந்து தடுமாற்றம்
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில், நான்காவது நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோ 30, போக்ஸ் 0 ஆகியோர் பேட் செய்து வருகின்றனர். அஸ்வின் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
இந்தியா ஆல் ஆவுட்
முன்னதாக இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான இன்று கூடுதலாக 88 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் 30 ரன்களுடன் பேட் செய்து வந்த துருவ் ஜுரல், சிறப்பாக பேட் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 90 ரன்கள் எடுத்து அவுட்டான ஜுரல் சதத்தை மிஸ் செய்தார்.
துருவ் ஜுரலுடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த குல்தீப் யாதவ் 28 ரன்கள் அடித்தார்.
இந்தியா முன்னிலை
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றும். விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் ராஜதத் பட்டிதார், ஷர்ஃப்ரஸ் கான், துருவ் ஜுரல் போன்ற இளம் வீரர்களை கொண்டதாக இந்திய பேட்டிங் படை இருந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்