தமிழ் செய்திகள்  /  Cricket  /  Ravi Shastri's Phone Call To Jasprit Bumrah That Changed India's Bowling Fate

Bumrah: ஜஸ்புரித் பும்ராவை வைத்து இந்திய பந்துவீச்சு எதிர்காலத்தை மாற்றிய ரவி சாஸ்திரி!

Marimuthu M HT Tamil
Feb 10, 2024 04:09 PM IST

இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2018ஆம் ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுடன் பேசிய தனது தொலைபேசி அழைப்பைப் பற்றி தற்போது பொதுவெளியில் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரியும் ஜஸ்பிரித் பும்ராவும்!
ரவி சாஸ்திரியும் ஜஸ்பிரித் பும்ராவும்! (File/PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

அங்கு அவர் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உலக கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பும்ரா, 2018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பரிந்துரையால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.          இங்கிலாந்தின் மைக்கேல் ஆதர்டனுடனான ஒரு நேர்காணலில்,ரவி சாஸ்திரி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீதான அவரது விருப்பத்தைப் பற்றி விசாரிக்க, பும்ராவுக்கு செய்த தொலைபேசி அழைப்பைப் பற்றி நினைவு கூர்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது திறனை உணராமல் பலர் பும்ராவை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவர் என்று அழைத்தனர்.

அப்போது அவருடன் ரவி சாஸ்திரி பேசியதாவது, "நான் பும்ராவுக்கு முதல் அழைப்பு விடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது கொல்கத்தாவில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். அதுவே, தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நாளாக இருக்கும் என்று அவர் கூறினார்" என்று ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்தார்.

‘’அவரிடம் கேட்காமலேயே பும்ரா, ஒருநாள் போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்டார். ஆனால், எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு பசியுடன் இருக்கிறார் என்று பார்க்க விரும்பினேன். தயாராக இருங்கள்; தயாராக இருங்கள் என்று சொன்னேன். நான் அவரை தென்னாப்பிரிக்காவில் கட்டவிழ்த்து விடப் போகிறேன் என்று சொன்னேன்.

பும்ரா 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானதிலிருந்து இந்திய வேகப்பந்து தாக்குதலை வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் 150 விக்கெட்டுகளை எட்டிய நாட்டின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர் ஆனார். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அறிமுகமானபோது கேப்டனாக இருந்த விராட் கோலியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட பும்ரா உற்சாகமாக இருந்தார்’ என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா, சிறப்பாக விளையாடி வருவது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ''டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட அவர் மிகவும் உற்சாகமாக உள்ளார்.

விராட் கோலியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அவர் ஆசைப்பட்டார். அவர்களுக்குத் தெரியும், ஒரு நாள் கிரிக்கெட்டில் எத்தனை விக்கெட்டுகள் எடுத்தாலும் அதை யாரும் நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்கள் எண்களை அவர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

ஜனவரி 2022-ல், கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகும் வரை பும்ராவை வழிநடத்தினார்; அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அங்கு கோவிட் -19 தொற்று காரணமாக ரோஹித் சர்மா அப்போது விளையாடமுடியவில்லை’’ என்றார். 

30 வயதான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

பும்ரா தற்போது இரண்டு போட்டிகளுக்குப் பிறகு இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார். அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil