‘கே.கே.ஆருக்கு எதிரான வெற்றி எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது, ஆனால்..’: பிபிகேஎஸ் துணைப் பயிற்சியாளர் ஹாடின் பேட்டி
ஐபிஎல் 2025 தொடரின் 31வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த ஸ்கோர் அடித்து அதை எதிரணியை அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

‘கே.கே.ஆருக்கு எதிரான வெற்றி எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது, ஆனால்..’: பிபிகேஎஸ் துணைப் பயிற்சியாளர் ஹடின் பேட்டி (PTI)
‘கே.கே.ஆருக்கு எதிரான வெற்றி எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது, ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் சிறப்பாக வர வேண்டும்’ என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் பிராட் ஹாடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு முல்லன்பூரில் நடந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி கே.கே.ஆரை 95 ரன்களுக்கு சுருட்டியது.
"தாங்கள் செய்யும் அனைத்தையும் டீம் நம்பத் தொடங்குகிறது என்பதை இந்த மேட்ச் மீண்டும் உறுதி செய்கிறது. எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வீரர்களுக்கு ஏற்பட்டது. நீங்கள் போட்டியில் ஆழமாகச் செல்லும்போது இது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன், "என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ஹாடின் கூறினார்.