ஐபிஎல் 2025: பூரான் ராக்கேட் வேக சிக்ஸ்.. பந்து தாக்கியதில் ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர்
ஐபிஎல் 2025: பூரான் அடித்த சிக்ஸர் ரசிகரின் தலை பவுண்டரியை தாண்டி பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது தாக்கிய நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அடிபட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐபிஎல் 2025 தொடரில் ஏபரல் 12ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ஸ்ட் - குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினர்.
முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பார்மில் இருக்கும் ஆரஞ்சு தொப்பி வெற்றியாளரான நிக்கோலஸ் பூரான் 34 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். அதேபோல் இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த போட்டில் அபிஷேக் ஷர்மா அதிவேக சதமடித்து 141 ரன்கள் அடித்தார்.
ரசிகருக்கு ரத்தம் சொட்ட காயம்
முன்னதாக, லக்னோ ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதிக்கொண்ட போட்டியின் போது பூரான் அடித்த சிக்ஸர் ஒன்று போட்டியை ரசித்த ரசிகர் மீது பந்து தாக்கியது. ரசிகரின் தலையில் பந்து தாக்கிய நிலையில் ரத்தம் சொட்டியது.
உடனடியாக அடிபட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் போட்டி முடிவதற்குள் தாக்குதலுக்கு உள்ளான ரசிகர் லக்னோ அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர்
ஐபிஎல் 2025 சீசனில் உச்சகட்ட பார்மில் இருந்து வரும் பேட்ஸ்மேனாக பூரான் இருந்து வருகிறார். இதுவரை விளையாடியிருக்கும் 6 இன்னிங்ஸில் 349 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 215.43 ஆக உள்ளது. அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார் பூரான்.
"இது ஆரஞ்சு தொப்பியைப் பற்றியது அல்ல. ஆனால் ஆட்டத்தை வெல்வது பற்றியது. விக்கெட் பேட்டிங் செய்வதற்கு மிகவும் அழகாக இருந்தது. ஒரு குழுவாக, எங்களிடம் பேட்டிங் ஆழம் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம்.
எனவே முடிந்தவரை தொடர முயற்சித்தோம். பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தது. என் பேட்-ஸ்விங்கை சரி செய்கிறேன். பந்தை பேட்டின் நடுப்பகுதிக்கு அருகில் கொண்டு வருகிறேன்.
அதிரடியில் மிரட்டல்
மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் சில நேரங்களில் ஆட்டத்தை உருவாக்க வேண்டும், சில நேரங்களில் ஒருங்கிணைக்க வேண்டும்" என்று குஜராத் டைட்ன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பின்னர் நிக்கோலஸ் பூரான் கூறினார்.
நிக்கோலஸ் பூரான் இந்த சீசனில் இதுவரை நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 69.80 என உள்ளது. அத்துடன் 26 பவுண்டரி, 31 சிக்ஸர்கள் எனவும் அதிரடியில் மிரட்டியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தனது அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உள்ளூர் மைதானமான ஏகானா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
