KKR vs LSG Result: ஒன்மேன் ஷோ காட்டிய சால்ட்! லக்னோவை ஊதி தள்ளிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kkr Vs Lsg Result: ஒன்மேன் ஷோ காட்டிய சால்ட்! லக்னோவை ஊதி தள்ளிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR vs LSG Result: ஒன்மேன் ஷோ காட்டிய சால்ட்! லக்னோவை ஊதி தள்ளிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 14, 2024 07:08 PM IST

லக்னோ பவுலர்களுக்கு எதிராக ஒன் மேன் ஷோ காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் பில் சால்ட் 89 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் லக்னோவுக்கு எதிராக எளிதான வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் பில் சால்ட்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் பில் சால்ட் (AP)

கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், நவீன் உல் ஹக் ஆகியோருக்கு பதிலாக தீபக் ஹுடா, வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷமர் ஜோசப் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.

லக்னோ பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 45 , கேஎல் 39, ஆயுஷ் பதோனி 29 ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வைபவ் அரோரா, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கொல்கத்தா சேஸிங்

இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் விக்கெட் வித்தியாசத்தில் இந்த சீசனின் நான்காவது வெற்றியை பெற்றது.

கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் ஓபனர் பில் சால்ஸ் 89, ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ பவுலர்களில் கட்டுப்பாடுடன் பந்து வீசிய மோக்சின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.