“பேடாஸ்ம்மா இவன் மாஸ்மா”! ஆஸி., பவுலர்களை கதறவிட்ட ரிஷப் பண்ட் - முன்னிலையுடன் இந்தியா நிதானம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  “பேடாஸ்ம்மா இவன் மாஸ்மா”! ஆஸி., பவுலர்களை கதறவிட்ட ரிஷப் பண்ட் - முன்னிலையுடன் இந்தியா நிதானம்

“பேடாஸ்ம்மா இவன் மாஸ்மா”! ஆஸி., பவுலர்களை கதறவிட்ட ரிஷப் பண்ட் - முன்னிலையுடன் இந்தியா நிதானம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 04, 2025 02:03 PM IST

முதல் பந்திலேயே சிக்ஸருக்கு பறக்க விட்டு பீஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்த போவதை ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு உணர்த்தினார் ரிஷப் பண்ட். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதிலும், 6 விக்கெட்டுகளை இழந்துள்ளதால் களத்தில் இருக்கும் ஜடேஜா - வாஷிங்கடன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“பேடாஸ்ம்மா இவன் மாஸ்மா”! ஆஸி., பவுலர்களை கதறவிட்ட ரிஷப் பண்ட் - முன்னிலையுடன் இந்தியா நிதானம்
“பேடாஸ்ம்மா இவன் மாஸ்மா”! ஆஸி., பவுலர்களை கதறவிட்ட ரிஷப் பண்ட் - முன்னிலையுடன் இந்தியா நிதானம் (AP)

இந்தியா முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதிலும் தற்போதைய நிலையில் லீட் ரன்களுடன் சேர்ந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. இன்னுன் 4 விக்கெட்டுகள் மட்டும் கைவசம் இருக்கும் நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.

பவுலர்களை பதம் பார்த்த பண்ட்

பச்சை புற்களுடன் காணப்பட்ட சிட்னி ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவிய நிலையில், முதல் நாளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளில் 15 விக்கெட்டுகள் எடுக்கப்பபட்டன.

என்னதான் பவுலர்களுக்கு நன்கு ஒத்துழைத்தாலும் என் ஆட்டம் எப்போதும் சரவெடி போல் தான் என தனது வழக்கமான அதிரடி பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஷப் பண்ட்.

இந்தியா 59 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய பண்ட், எதிர்கொண்ட முதல் பந்தையை இறங்கி வந்து சிக்ஸராக மாற்றி மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை பாரபட்சம் பார்க்காமல் பவுண்டரி, சிக்ஸர் என மைதானத்தின் நாலாபுறமும் அடித்து துவைத்து துவம்சம் செய்தார். பிட்ச் பவுலர்களுக்கு ஒத்துழைத்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் தனியொரு தாண்டவம் ஆடினார். பண்ட் அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு டி20 இன்னிங்ஸை வெளிப்படுத்திய பண்ட், 29 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியா பவுலர்களின் அட்டாக் பந்து வீச்சை அசால்டாக டீல் செய்தார். 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த பண்ட், ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் வீசிய வலையில், அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தை அடிக்க முயற்சித்து சிக்கினார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டர், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

பண்ட் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் நிலைத்து நின்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் இன்றே கூட 200 ரன்களை கடந்திருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு மரண பயத்தை காட்டிய இன்னிங்ஸை வெளிப்படுத்தி சென்றார்.

தலைவலி தந்த போலாந்து

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தலைவலி தரும் பவுலராக இருந்த போலாந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவின் டாப் ஆர்டரை நிலைகுலைய செய்தார். தற்போது வரை 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வெப்ஸ்டர், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். ஸ்டார் பவுலரான ஸ்டார்க் ஓவரை பண்ட் அடித்து துவைத்தார். 4 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 36 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

டாப் ஆர்டர் தடுமாற்றம்

இந்த தொடர் முழுவதுமே இந்தியாவின் டாப் ஆர்டர் பெரிதாக ஜொலிக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியை தவிர அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆட்டம் கண்டே வந்துள்ளது. தற்போது இந்த டெஸ்ட் தொடரின் கடைசி இன்னிங்ஸிலும் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் தொடர்ந்துள்ளது.

முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து சிறப்பாக தொடங்கிய ஜெய்ஸ்வால், அதன் பின்னர் ரன்கள் குவிக்க தடுமாறினார். 22 ரன்களில் போலாந்து பந்தில் போல்டாகி வெளியேறினார். அதேபோல் மற்றொரு ஓபனரான கேஎல் ராகுலும் நிதானத்தை கடைப்பிடிக்க தவறிய நிலையில் 13 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் ரோஹித்துக்கு பதிலாக சேர்க்கப்பட்ட சுப்மன் கில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 13 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

கோலி ஏமாற்றம்

இந்த டெஸ்ட் தொடர் கோலியின் கேரியரில் கரும்புள்ளி என சொல்லும் அளவுக்கு அவரது ஆட்டம் அமைந்துள்ளது. சொல்லி வைத்தார் போல், ஆஸ்திரேலியா பவுலர்கள் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தை வீசி பொறி வைத்து அனைத்து இன்னிங்ஸிலும் கோலியை தூக்கியுள்ளனர். இந்த தொடரில் 5 போட்டிகளில் மொத்தம் 190 ரன்களே கோலி அடித்துள்ளார். அத்துடன் ஒரேயொரு சதம் மட்டுமே அவர் அடித்துள்ளார். மொத்தம் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கும் கோலியின் சராசரி 23.75 ஆக உள்ளது. சதமடித்த போட்டியில் மட்டும் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.