Rishabh Pant: விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை! கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயர்சை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்
டி20 உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை புரிந்துள்ளார் ரிஷப் பண்ட். கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயரஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முந்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கை அணியின் குமார சங்ககாரா, தென் ஆப்பரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரி நிகழ்த்திய சாதனையை முறியிடித்துள்ளார் ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட் சாதனை
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வரும் ரிஷப் பண்ட் மூன்று கேட்ச்களை பிடித்துள்ளார். ரஹ்மனுல்லா குர்பாஸ், குல்படின் நயீப், நவீன் உல் ஹக் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி காரணமாக இருந்தார். இதன் மூலம் இந்த தொடரில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.
அத்துடன் இது சாதனையாகவும் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஏபி டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், குமார சங்ககாரா ஆகியோர் 9 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தனர். இதுவே ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பரால் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையில் இருந்து வந்த நிலையில், தற்போது ரிஷப் பண்ட் அதை முறியடித்துள்ளார்.