Oman vs Namibia Result: 'யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்'-நமீீபியா-ஓமன் மோதல்.. சூப்பர் ஓவரில் ஜெயித்தது யார்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Oman Vs Namibia Result: 'யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்'-நமீீபியா-ஓமன் மோதல்.. சூப்பர் ஓவரில் ஜெயித்தது யார்?

Oman vs Namibia Result: 'யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்'-நமீீபியா-ஓமன் மோதல்.. சூப்பர் ஓவரில் ஜெயித்தது யார்?

Manigandan K T HT Tamil
Published Jun 03, 2024 10:42 AM IST

ICC Men's T20 World Cup 2024: முதல் மேட்ச்சில் அமெரிக்காவும் இரண்டாவது மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸும் ஜெயித்தது. முன்னதாக, நமீபியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஓமன் விளையாடியது. ஓமன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 109 ரன்களில் சுருண்டது.

Oman vs Namibia Result: 'யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்'-நமீீபியா-ஓமன் மோதல்.. சூப்பர் ஓவரில் ஜெயித்தது யார்?
Oman vs Namibia Result: 'யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்'-நமீீபியா-ஓமன் மோதல்.. சூப்பர் ஓவரில் ஜெயித்தது யார்? (icc)

குரூப் பி பிரிவில் நமீபியா, ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அணிகள் தங்களது முதல் லீக் மேட்ச்சில் இன்று மோதியது. இது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மூன்றாவது மேட்ச் ஆகும்.

முதல் மேட்ச்சில் அமெரிக்காவும் இரண்டாவது மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸும் ஜெயித்தது. முன்னதாக, நமீபியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஓமன் விளையாடியது. ஓமன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 109 ரன்களில் சுருண்டது.

அந்த அணியின் காலித் கெயில் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

மேட்ச் டிரா

நமீபியா சார்பில் டிரம்பில்மேன் 4 விக்கெட்டுகளையும், விஸே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. மேட்ச்சும் டிரா ஆனது.

நமீபியா வீரர் ஜன் ஃபிரைலிங்க் 45 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் நமீபியா வென்றது. இதன்மூலம், குரூப் பி பிரிவில் முதல் மேட்ச்சில் நமீபியா வென்றது.

இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் குரூப் டி பிரிவில் முதல் மேட்ச்சில் மோதுகிறது. நாளை காலை 6 மணிக்கு ஆப்கன்-உகாண்டா அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

"டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் 2 ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இந்த முறை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகிறது, பெரும்பாலான போட்டிகள் காலை 6 மணி அல்லது இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் உள்ளன.

குரூப் A - இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா

குரூப் B - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூப் C - நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, உகாண்டா

குரூப் D - தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடுகிறது. அதாவது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி அதிகபட்சமாக 8 புள்ளிகளைப் பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 8 நிலைக்குச் செல்லும். சூப்பர் 8 இல் இரண்டு குழுக்கள் போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

டி20 உலகக் கோப்பை 2024 நடைபெறும் இடங்கள்: டி20 உலகக் கோப்பை 2024 மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள 9 மைதானங்களிலும் நடைபெறுகிறது. அதில் ஆறு மைதானங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், மூன்று மைதானங்கள் அமெரிக்காவிலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகளில், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், கென்சிங்டன் ஓவல், பிராவிடன்ஸ் ஸ்டேடியம், டேரன் சமி கிரிக்கெட் மைதானம், அர்னோஸ் வேல் ஸ்டேடியம் மற்றும் பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.