India 1st Innings: ‘இந்தப் பேரை நோட் பண்ணிக்கோங்க’-முதல் சதம் விளாசி அசத்திய இளம் வீரர்..200 ரன்களை கடந்த இந்தியா
Ind vs Zim 2nd T20: முதல் மேட்ச்சில் 31 ரன்கள் விளாசிய கில், இந்த ஆட்டத்தில் சோபிக்கத் தவறினார். வெறும் 2 ரன்களில் பெவிலியன் சென்றார். அதேநேரம், அவருடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஜோடி சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் சர்மா, அதிரடி காண்பித்து சதம் விளாசினார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 5டி20 மேட்ச்களில் விளையாடி வருகிறது.
இந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முற்றிலும் இளம் வீரர்களுடன் களமிறங்கி ஆடி வருகிறது.
ஹராரே நகரில் நடக்கும் இந்தத் தொடரின் முதல் மேட்ச் நேற்று நடந்தது. அந்த மேட்ச்சில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது.
இந்நிலையில், இரண்டாவது டி20 ஓய்வு இல்லாமல் அடுத்த தினமே அதாவது இன்று தொடங்கியது.
இந்த மேட்ச்சில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு மேட்ச் ஆரம்பித்தது. டாஸ் வென்ற கில், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் மேட்ச்சில் 31 ரன்கள் விளாசிய கில், இந்த ஆட்டத்தில் சோபிக்கத் தவறினார். வெறும் 2 ரன்களில் பெவிலியன் சென்றார்.
அதேநேரம், அவருடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஜோடி சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் சர்மா, அதிரடி காண்பித்து சதம் விளாசினார்.
முதல் சதம்
இது இவரது முதல் சர்வதேச டி20 சதம் ஆகும். சன்ரைசர்ஸ் அணிக்காக அமர்க்களப்படுத்தியவர் தான் இந்த அபிஷேக். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
100 அடித்ததும் ஆட்டமிழந்தார். 47 பந்துகளில் அவர் 8 சிக்ஸர்கள், 7 ஃபோர்ஸுடன் 100 ரன்களை விளாசினார்.
ருதுராஜ் கெய்க்வாட், அரை சதம் பதிவு செய்து அசத்தினார். அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங், அவருக்கு தோள் கொடுத்தார்.
இவ்வாறாக, இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே 235 ரன்களை எடுத்தால் ஜெயிக்கும்.
பிசிசிஐ ட்வீட்
முன்னதாக, இன்றைய மேட்ச்சில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் இந்த மேட்ச் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி முதல் டி20 இல் விளையாடிய வீரர்கள் தான் இந்த அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் டி 20 வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததால், இந்திய அணியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பின் சாளரம் இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
முதல் டி20 ஆட்டத்தில், அறிமுக வீரர்களான ரியான் பராக், துருவ் ஜூரெல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தங்கள் பேட்டிங்கில் இருந்து ரன்களை சேகரிக்கத் தவறிவிட்டனர். ஜிம்பாப்வே 115/9 என்று கட்டுப்படுத்திய போதிலும், 116 ரன்களை சேஸிங் செய்யும் போது இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறினர்.
10வது ஓவரில் இந்தியா 43/5 என்று இழந்தது, ஆனால் இந்தியாவுக்கு இன்னும் நம்பிக்கை இருந்தது, கிரீஸில் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்தியாவை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல விரும்பினர். ஆனால் கில் தனது விக்கெட்டை ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசாவிடம் கொடுத்த பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. சுந்தர் கிரீஸில் இருந்ததாலும், ஆவேஷ் கான் அதிரடியாக விளையாடியதாலும், கடைசியில் ஆட்டத்தை எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இன்னும் கொஞ்சம் இருந்தது. இருப்பினும், ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் தங்கள் பதற்றத்தை கட்டுப்படுத்தி, 2024 ஆம் ஆண்டின் முதல் டி20 தோல்வியை இந்தியாவுக்கு வழங்கினர். ஜூன் 18, 2016 க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
டாபிக்ஸ்