WPL 2024: 'கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து விளையாட்டுகளுக்கும் WPL ஒரு முன்னுதாரணம்'-நீதா அம்பானி பெருமிதம்
WPL 2024: நாக் அவுட் கட்டத்திற்கு முன்னதாக இந்த சீசனில் மகளிர் பிரீமியர் லீக்கில் (டபிள்யூபிஎல்) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடியபோது, அணியின் உரிமையாளர் நீதா அம்பானி நேற்று டெல்லியில் அணிக்கு ஆதரவாக இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இந்த சீசனில் மகளிர் பிரீமியர் லீக்கில் (டபிள்யூபிஎல்) தனது கடைசி லீக் கட்ட போட்டியை நாக் அவுட் கட்டத்திற்கு முன்னதாக விளையாடியபோது, அணியின் உரிமையாளர் நீதா அம்பானி செவ்வாய்க்கிழமை டெல்லியில் அணிக்கு ஆதரவாக இருந்தார், அங்கு இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளுக்கான டபிள்யூபிஎல் போன்ற ஒரு தளத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
உலகின் சிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து விளையாட இளம் பெண்களுக்கு டபிள்யூ.பி.எல் ஒரு சிறந்த வாய்ப்பு என்று அம்பானி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்கள் பெண்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன ஒரு ஃபிளாட்ஃபார்ம் இது. இந்த பெண்கள் உலகின் சிறந்தவர்களுடன் விளையாடுகிறார்கள், இது ஒரு இதயத்தைத் தூண்டும் உணர்வு” என்றார்.
இந்த ஆண்டு அணியின் பிரேக்அவுட் நட்சத்திரங்களில் ஒருவரான சஜீவன் சஜானாவைப் பற்றி அவர் சிறப்புக் குறிப்பிடுகையில், "சஜனாவுக்கு விருது கிடைத்ததை நான் பார்த்தேன். அவர் அரசியல் அறிவியலில் பட்டதாரி, அவரது தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர், அவர் கிரிக்கெட் விளையாடுவதைத் தேர்ந்தெடுத்தார். பெற்றோர்கள் தங்கள் பெண்கள் தாங்கள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்க இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான விளையாட்டுகளிலும் பெண்களுக்கு டபிள்யூ.பி.எல் ஒரு முன்னுதாரணம்.
