'இந்தியாவில் விளையாட விருப்பம் இல்லை': பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை தடாலடிப் பேச்சு
இந்திய ஆண்கள் அணியும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை, இறுதிப் போட்டி உட்பட அவர்களின் போட்டிகள் துபாயில் நடைபெற்றன.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்டர் பெரோசா குல், ‘எங்கள் அணிக்கு இந்தியாவில் விளையாட விருப்பம் இல்லை’ என்று தடாலடியாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த தகுதிச் சுற்றில் பரபரப்பான ஆட்டத்திற்கு பிறகு வரவிருக்கும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் 2025 க்கு பாகிஸ்தான் தங்கள் இடத்தை பதிவு செய்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் நடுநிலையான மைதானத்தில் நடைபெறும் என்பதால் போட்டி ஹைப்ரிட் முறையில் நடைபெறும் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.
ஒருநாள் அணி தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான், உயர் தரவரிசை அணிகளான மேற்கிந்திய தீவுகள் (ஆறாவது) மற்றும் வங்கதேசம் (எட்டாவது இடம்) அணிகளுக்கு எதிரான வெற்றி உட்பட ஐந்து போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ள நிலையில் அவர்களின் தகுதி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி ஏற்கனவே அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.