IND vs AUS 4th T20I: ரூ. 3 கோடிக்கு மேல் கட்டண பாக்கி..! ராய்ப்பூர் மைதானத்தில் மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள்
ராய்ப்பூர் ஷாகித் வீர் நாரயண் சிங் மைதானத்தில் முதல் சர்வதேச டி20 போட்டி நடைபெறும் நிலையில் இந்த கரண்ட் பில் கட்டாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷாகித் வீர் நாரயண் சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
மிக பெரிய பவுண்டரியை கொண்டிருக்கும் இந்திய மைதானமாக இங்கு நடைபெறும் இரண்டாவது சர்வதேச போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டி அமைந்துள்ளது. அத்துடன் இந்த போட்டி இங்கு நடைபெறும் முதல் சர்வதேச டி20 போட்டியாகவும் உள்ளது. இந்தியாவின் 50வது சர்வதேச மைதானம் என்கிற சிறப்பும் இந்த ராய்ப்பூர் மைதானத்துக்கு உள்ளது.
இவ்வளவு பெருமையும், சிறப்புகளையும் கொண்டபோதிலும் கடந்த 2009 முதல் 14 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என கூறி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மின்சார கட்டணம் நிலுவை தொகையாக ரூ. 3.16 கோடி இருந்து வரும் நிலையில், அதை இன்று வரையில் செலுத்ததாத காரணத்தால் சத்தீஸ்கர் மாநி மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இன்றைய போட்டியில் பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் ஜெனரேட்டரை பயன்படுத்த மைதான நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்