இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்..வரலாறு படைத்த நியூசிலாந்து - இந்தியாவுக்கு இது நான்காவது முறை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்..வரலாறு படைத்த நியூசிலாந்து - இந்தியாவுக்கு இது நான்காவது முறை

இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்..வரலாறு படைத்த நியூசிலாந்து - இந்தியாவுக்கு இது நான்காவது முறை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 03, 2024 03:08 PM IST

இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணியாக வரலாறு படைத்த நியூசிலாந்தது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்..வரலாறு படைத்த நியூசிலாந்து  - இந்தியாவுக்கு இது நான்காவது முறை
இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்..வரலாறு படைத்த நியூசிலாந்து - இந்தியாவுக்கு இது நான்காவது முறை (PTI)

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதையடுத்து இந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என வரலாறு படைத்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து வெற்றி

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 235 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 260 ரன்கள் அடித்து 25 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து, 174 ரன்களில் ஆல்அவுட்டானது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது குறைவான இலக்காக இருந்தாலும் ஸ்பின் பவுலிங்ககுக்கு ஆடுகளம் சிறப்பாக ஒத்துழைத்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறியதுடன், தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் முறையாக ஒயிட் வாஷ்

இருப்பினும் 121 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 25 ரன்களில் இந்தியா தோல்வியை தழுவி தொடரை முழுமையாக இழந்து, முதல் முறையாக சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆனது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அதிரடியாக பேட் செய்து 64 ரன்கள் எடுத்தபோதிலும் மற்றவர்கள் பெரிய பங்களிப்பை வெளிப்படுத்தாத நிலையில் இந்தியா தேல்விக்கு காரணமாக அமைந்தது.

அஜாஸ் படேல் கலக்கல்

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து நியூசிலாந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இடது கை ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னர் இருந்தார். இதைத்தொடர்ந்து மூன்றாவது டெஸ்டில் மற்றொரு இடது கை ஸ்பின்னரான அஜாஸ் படேல் முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 6 என மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை பறிக்க காரணமாக இருந்தார்.

நியூசிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்திய குறைவான இலக்குகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி கட்டுப்படுத்திய மிகவும் குறைவான இலக்குகளில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய வெற்றி இரண்டாவது சிறந்ததாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் 1978இல் வில்லிங்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 137 ரன்கள் சேஸ் செய்ய விடாமல் நியூசிலாந்து கட்டுப்படுத்தியது. இதுவே அந்த அணி குறைவான இலக்கை கட்டுப்படுத்தியதில் சிறந்ததாக உள்ளது.

அத்துடன் 2018இல் அபிதாபியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 176 ரன்கள் சேஸ் செய்ய விடாமல் கட்டுப்படுத்தியது.

200 ரன்களை சேஸ் செய்ய இந்திய அணியின் போட்டிகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 மற்றும் அதற்கு குறைவான இலக்கை சேஸ் செய்யாமல் தோல்வி அடைந்திருப்பது இது நான்காவது முறையாகும்.

இதற்கு முன்னதாக கடந்த 1997இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் 120 ரன்கள் சேஸ் செய்யாமல் தோல்வியுற்றது.

பின்னர் 2015இல் இலங்கை அணிக்கு எதிராக காலேவில் நடைபெற்ற போட்டியில் 176 ரன்கள், 2018இல் இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடந்த போட்டியில் 194 ரன்கள் சேஸ் செய்யாமல் தோல்வியுற்றது.

இதன் பின்னர் இன்று நியூசிலாந்துக்கு எதிராக 147 ரன்கள் எடுக்காமல் கோட்டைவிட்டுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.