பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டம்.. நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. தொடரை கைப்பற்றியது!
ஃபின் ஆலன் 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டம்.. நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. தொடரை கைப்பற்றியது! (AFP)
பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 3 மேட்ச்களில் ஜெயித்தது. 1 மேட்ச்சில் மட்டுமே பாகிஸ்தான் ஜெயித்தது. இன்னும் ஒரு மேட்ச் உள்ளது.
ஜேக்கப் டஃபி மற்றும் ஜகாரி ஃபோல்க்ஸ் 7 விக்கெட்டுகளை வீழ்த்த, நியூசிலாந்து அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தானை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.
