Harbhajan Singh: நடிகைகள் அனுஷ்கா சர்மா, அதியா ஷெட்டி குறித்து ஹர்பஜன் சிங் கருத்தால் சர்ச்சை
அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி குறித்து கருத்து தெரிவித்ததற்காக சர்ச்சையை எதிர்கொண்டார்.
அகமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி குறித்து கூறிய கருத்துகளால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 2011 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ஹர்பஜன் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கே.எல்.ராகுலும் , விராட் கோலியும் கிரீஸில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. கோலியும் ராகுலும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் ராகுல் மனைவி அதியா ஷெட்டி மீது கேமரா விரைவில் திரும்பியது. அவர்கள் இருவரும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இந்தியில் கருத்து தெரிவித்த ஹர்பஜன், “அனுஷ்கா சர்மாவிற்கும் அதியா ஷெட்டிக்கும் இடையேயான உரையாடல் கிரிக்கெட் பற்றியா அல்லது திரைப்படங்களைப் பற்றியா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி எந்த அளவுக்குப் புரிதல் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை." என்றார்.
நெட்டிசன்கள் பதிலடி
சில சமூக ஊடக பயனர்கள் ஹர்பஜனின் கருத்துகளுக்காக அவருக்கு பதிலடி கொடுத்தனர், மற்றவர்கள் உடனடியாக இரண்டு நடிகைகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சிலர் அதற்கு ஒரு நகைச்சுவையான கோணத்தைக் கண்டுபிடித்தனர், எப்படி அரை சதம் அடிப்பார்கள் என்பதைப் பற்றி இரண்டு நடிகைகளும் பேசிக் கொண்டிருந்தனர்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி:
கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலியின் துணிச்சலான முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய அணியால் 50 ஓவர்களில் 240 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, இறுதியில் ஆஸி அணியால் 7 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் மிக எளிதாக இலக்கை துரத்த முடிந்தது. -டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
டாபிக்ஸ்