இரானி கோப்பை: 27 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி..முதல் இன்னிங்ஸில் முன்னிலை!ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்திய மும்பை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  இரானி கோப்பை: 27 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி..முதல் இன்னிங்ஸில் முன்னிலை!ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்திய மும்பை

இரானி கோப்பை: 27 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி..முதல் இன்னிங்ஸில் முன்னிலை!ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்திய மும்பை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 06, 2024 12:33 AM IST

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்திய மும்பை, தனது 15வது இரானி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் 27 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இரானி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
இரானி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி (X/BCCIDomestic)

அஜிங்க்யா ரஹானே தலைமையில் விளையாடிய மும்பை அணிக்கு இந்த வெற்றி, முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற போதே உறுதியானது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது 15வது இரானி கோப்பை வென்றுள்ளது. ரஞ்சி கோப்பை அணிகளில் அதிக முறை இரானி கோப்பை வென்ற அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. 

1997-98 சீசனுக்கு பிறகு, இடைப்பட்ட ஆண்டுகளில் எட்டு முறை இரானி கோப்பை இறுதி போட்டிகளில் விளையாடிய போதிலும், கோப்பை வெல்ல மும்பை அணி தவறியது. இதையடுத்து தற்போது பெற்றிருக்கும் இந்த வெற்றி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மும்பை ஆதிக்கம்

இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான மும்பை அணி  முதல் நாளிலிருந்தே தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் மும்பை 537 ரன்கள் குவித்தது. 

சர்ஃபராஸ் கான் அற்புதமாக பேட் செய்து இரட்டை சதமடித்ததோடு, 222 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது முதல்தர கிரிக்கெட்டில் அவரது நான்காவது இரட்டை சதமாகும். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரஹானே 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

ரெஸ்ட் ஆஃப் இந்தியா போராட்டம்

ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஒரு துணிச்சலான போராட்டத்தை வெளிப்படுத்த, அபிமன்யு ஈஸ்வரன் அபாரமாக பேட் செய்து 191 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை 416 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். இதனால் 121 ரன்களும் மும்பை அணி முன்னிலை பெற்றது. இந்த முன்னிலை தான் மும்பை வெற்றியை இறுதியில் வரையறுக்கும் காரணியாக மாறியது.

மீண்டும் பேட்டிங் செய்ய, மும்பை அவர்களின் டாப் ஆர்டர் சரிவதால் ஆரம்ப சிக்கலை எதிர்கொண்டது. ஆனால் தனுஷ் கோட்யான் போட்டியை வரையறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோட்டியன் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் மும்பை ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்தது. 

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை வென்ற கோப்பைகளின் பட்டியல்:

ரஞ்சி டிராபி - 42

இரானி கோப்பை - 15

விஜய் ஹசாரே டிராபி - 4

சையத் முஷ்டாக் அலி டிராபி - 1

மறக்க முடியாக ஆண்டு

வான்கடே மைதானத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 42வது ரஞ்சி டிராபி பட்டத்தை வென்றது மும்பை. இதன் பின்னர் தற்போது தற்போது பெற்றிருக்கும் இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி 42வது பட்டத்தை வென்றது. அந்த போட்டியில் சர்ஃபராஸின் இளைய சகோதரர் முஷீர் கான், இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் விதர்பாவுக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும் விதமாக 95 ரன்கள் எடுத்தார்.

முஷீர் இரானி கோப்பைக்கான அணியிலும் இருந்தார், ஆனால் தொடருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் சிக்கி கழுத்து முறிவு ஏற்பட்டது. அதனால் அவர் தொடரை விட்டு வெளியேறினார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.