Tamil News  /  Cricket  /  Maxwell Heads Wives Attacked With Disgusting Hateful Threats After Wc Win

Glenn Maxwell: டிராவிஸ் ஹெட் மனைவி, மேக்ஸ்வெல் மனைவிக்கு சமூக வலைத்தளத்தில் அச்சுறுத்தல்

Manigandan K T HT Tamil
Nov 21, 2023 12:17 PM IST

ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை ஹீரோக்களான டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் லைஃப் பார்ட்னருக்கு சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க வார்த்தைகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸி., வீரர்கள் டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல்
ஆஸி., வீரர்கள் டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்ற பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 

பாட் கம்மின்ஸ் அணி, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினர். இதையடுத்து, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன்,  மனவேதனையை வெளிப்படுத்தினர். அனைத்து சமூக ஊடக தளங்களிலும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியபோது, சில விஷமிகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் பார்ட்னர்களை தாக்கிப் பேசினர்.

கிளென் மேக்ஸ்வெல் மனைவி, டிராவிஸ் ஹெட்டின் மனைவி சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க வார்த்தைகளால் குறிவைக்கப்பட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன், பின்னர் இன்ஸ்டாகிராமில் வெட்கக்கேடான இந்தச் செயலை அம்பலப்படுத்தினார்.

137 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெசிகாவும் சமூக வலைத்தளத்தில் குறிவைக்கப்பட்டார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் நீஷம், ஆஸி., வீரர் என்று தவறாக நினைத்து இன்ஸ்டாகிராமிலும் செய்திகளால் தாக்கப்பட்டார், அதற்கு அவர் பின்னர் பதிலடி கொடுத்தார்.

உலகக் கோப்பை பைனலில் இந்தியா வெறும் 240 ரன்களில் சுருண்டது. ரோஹித் ஷர்மா தனது 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஒரு சரியான தொடக்கத்தைக் கொடுத்தார். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் 18.3 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்கோரை அதிகரிக்க போராடினர்.

எனினும், ஆஸ்திரேலிய அணி இலக்கை 43 ஓவர்களில் எட்டி உலகக் கோப்பை தட்டித் தூக்கியது.

இதனிடையே, அதீத நம்பிக்கையே இந்தியாவின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்தார்.

WhatsApp channel