Cricketers Retired 2024: இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் லிஸ்ட்.. இத்தனை இந்திய வீரர்களா?
இந்த ஆண்டு அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், டி20 கிரிகெட்டில் மட்டும் ஓய்வு பெற்ற வீரர்கள் யார் யார் என பார்ப்போம்.

Cricketers Retired 2024: இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் லிஸ்ட்.. இத்தனை இந்திய வீரர்களா?
2024ல் இதுவரை மொத்தம் 31 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நிறைய பேர் ஓய்வு அறிவித்தனர். இதேபோல், 2024லும் பலர் ஓய்வு அறிவித்தனர். அந்த வீரர்கள் யார் யார் என பார்ப்போம்.
மொயின் அலி
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி தனது 37வது வயதில் செப்டம்பர் 8, 2024 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்தின் கடைசி இரண்டு ஐசிசி கோப்பை வெற்றிகளின் ஒரு பகுதியாக மொயீன் அலி இருந்தார்.
2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகமான அலி, 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக, அவர் தனது சர்வதேச வாழ்க்கையில் 6678 ரன்கள் எடுத்தார், எட்டு சதங்கள் மற்றும் 366 விக்கெட்டுகளை எடுத்தார்.
