தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Afg Toss: ஒரேயொரு அரைசதம் போதும்..! மைல்கல் சாதனை படைப்பாரா கோலி? இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம்

IND vs AFG Toss: ஒரேயொரு அரைசதம் போதும்..! மைல்கல் சாதனை படைப்பாரா கோலி? இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 20, 2024 07:58 PM IST

ஒரேயொரு அரைசதம் போதும் மைல்கல் சாதனை படைக்கும் நிலையில் விராட் கோலி உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், சூப்பர் 8 சுற்று முதல் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றமாக குலதீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம், மைல்கல் சாதனை படைப்பாரா கோலி
இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம், மைல்கல் சாதனை படைப்பாரா கோலி

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த தொடரின் 43வது போட்டியும், சூப்பர் 8 சுற்று மூன்றாவது போட்டியாகவும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பார்போடாஸில் நடைபெறுகிறது.

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அத்துடன் லீக் சுற்று முழுவதும் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடி வந்த இந்தியா, தற்போது சூப்பர் 8 சுற்று முதல் போட்டியில் முக்கிய மாற்றம் செய்துள்ளது.

அதன்படி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு பதிலாக, ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அணிக்குள் ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடது கை ஸ்பின்னராக விளையாடவுள்ளார்.

அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆடுகளம் போக போக மெதுவாக மாற வாய்ப்பு இருப்பதாக தோன்றுவதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருப்பதாக ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

இதேபோல் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கானும், முதலில் பேட்டிங் செய்ய விரும்பியதாகவும், டி20 கிரிக்கெட்டில் டாஸை விட செயல்பாடுதான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்

ஆப்கானிஸ்தான் அணியிலும் பவுலிங் ஆல்ரவுண்டர் கரீம் ஜனத்துக்கு பதிலாக தொடக்க பேட்டரும், இடது கை ஸ்பின் பவுலருமான ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் சேர்க்கப்பட்டுள்ளார்.

மைல்கல் சாதனையை நோக்கி கோலி

இந்த தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு முறை கூட இரட்டை இலக்க ரன்கள் எடுக்காமல், பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் கோலி அரைசதமடித்தால் டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த சாதனையை சமன் செய்யலாம். எனவே அவர் தனது பார்மை மீட்டு அரைசதம் அடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிட்ச் நிலவரம்

புதிதாக இருக்கும் இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாக இருக்கும். சரியான லென்தில் பந்து வீசினால் பவுலர்களும் ஜொலிக்கலாம். பெரிய பவுண்டரிகள் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கலாம். பிங்கர் ஸ்பின்னர்களை காட்டிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 160 ரன்கள் சவலான இலக்காக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், ஹஸ்ரதுல்லா ஜசாய், குல்பாடின் நயிப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், நவீன் உல் ஹக், ஃபசல் ஃபாரூக்கி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.