ஆர்சிபி ரசிகர்கள் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு ஏன்? மனம் திறந்த கோலி
ஆர்சிபி ரசிகர்களின் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் ஓய்வு அறிவிக்க முக்கிய காரணமே இளம் வீரர்களுக்கு போதுமான கால அவகாசம் தர வேண்டும் என்பது தான் என்று விராட் கோலி பேசியுள்ளார்.

கிங் கோலி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான விராட் கோலி போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.
இரண்டு வருட சுழற்சி தேவை
இதுகுறித்து கோலி கூறியதாவது, "கோப்பை வென்ற பிறகு எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிடப்போவதில்லை. மாறாக புதிய வீரர்கள் குழு தயாராக இருப்பதை அறிவேன். அவர்களுக்கு போதிய நேரம் தேவை என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் டி20 போட்டிகளில் இருந்து விலக முடிவு எடுத்தேன்.
ஒவ்வொரு வீரர்களும் தங்களை பரிணமித்துகொள்ள, அழுத்தத்தை கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட வேண்டும். உலகக் கோப்பை வரும்போது தாங்கள் முழுவதுமாக தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாடுவதற்கு அவர்கள் இரண்டு வருட சுழற்சி தேவை.