Team India: கில்லுக்கு புரொமோஷன்.. ஷமி கம்பேக்.. காயமடைந்த பும்ராவுக்கு இடம் - சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு
Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முழு பிட்னஸ் இல்லாத பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் நல்ல பார்மில் இருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
முகமது ஷமி கம்பேக்
அதன்படி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இவருக்கான பேக்அப் வீரராக ஹர்ஷித் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் 2023 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அணியில் கம்பேக் கொடுக்கிறார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிதான் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை சாம்பியன்
2002ஆம் ஆண்டு இலங்கையுடன் பகிர்ந்தும், 2013இல் தோனி தலைமையில் வென்று இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வெற்றி பெற்ற அணியாக இந்தியா இருந்து வருகிறது. கடைசியாக 2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் வென்றது.
இதைத்தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த முறை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை கருத்தி கொண்டு இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கவுள்ளது.
கில்லுக்கு புரொமோஷன்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுப்மன் கில், துணை கேப்டனாக புரொமோட் செய்யப்பட்டுள்ளார். கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியாவிடம் இருந்த் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேஎல் ராகுல் அணியில் ப்யூட் பேட்ஸ்மேனாகவும், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராகவும் களமிறங்கவுள்ளனர். அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு
இந்திய டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான பேட்டிங்கால் கவனம் ஈர்த்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரு நாள் அணியில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. "கடந்த 6-8 மாதங்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்த சாதனைகளின் அடிப்படையில் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இதுவரை ஒருநாள் போட்டியில் விளையாடாத போதிலும், அவரிடம் இருக்கும் திறமையின் காரணமாக சேர்க்கப்பட்டதாகவும் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
மற்றபடி விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் பேட்ஸ்மேன்களாகவும், ரவீந்திர ஜடேஜா அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் ஸ்பின்னர்களாகவும், அர்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சாளராகவும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்
சாம்பியன் டிராபி 2025 மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப்கே பந்த் (விக்கெட் கீப்பர்) , ஹர்ஷித் ராணா (பும்ராவின் பேக்-அப்)
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி நண்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடையை செய்திகள்