Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில் நடந்த அதிரடி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில் நடந்த அதிரடி

Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில் நடந்த அதிரடி

Marimuthu M HT Tamil
Jan 25, 2025 05:44 PM IST

Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில் நடந்த அதிரடி ஆட்டத்தின் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில்  நடந்த அதிரடி
Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில் நடந்த அதிரடி (PTI)

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங் செய்தது. மும்பை அணியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுடனும், ரோஹித் சர்மா மூன்று ரன்களுடனுடம் அவுட் ஆகினர். குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2015ஆம் ஆண்டுக்குப் பின் முதல் டிராபி போட்டி இதுவாகும்.

இருந்தாலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அடுத்து, ஹர்திக் தாமூர் 7 ரன்களுடனும், மும்பை அணியின் கேப்டனான அஜிங்கியா ரஹானே 12 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

 முதல் இன்னிங்ஸில் சொதப்பிய மும்பை அணி:

அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களுடனும், சிவம் துபே, சாம்ஸ் முலானி ரன்கள் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி முதல் இன்னிங்ஸிலேயே தடுமாறியது. அடுத்து வந்த ஷ்ரதுல் தாக்கூர் 51 ரன்களுடனும், தனுஷ்கோடியன் 26 ரன்களும் எடுத்து அணியின் மானத்தைக் காப்பாற்றினர். அடுத்து மோஹித் அவஸ்தி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மொத்தத்தில் முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களுக்கு 120 ரன்கள் மட்டுமே மும்பை அணி அடித்தது.

அடுத்து பேட்டிங் பிடித்த ஜம்மு காஷ்மீர் அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்களை எடுத்தது.

குறிப்பாக, சுபம் கஜுரியா 53 ரன்களும், யவீர் ஹாசன் 29 ரன்களும், அபித் முஷ்டக் 44 ரன்களும் எடுத்து ஜம்மு காஷ்மீர் அணியின் நிலையை மேம்படுத்தினர். மும்பை அணியின் சார்பில் மோஹித் அவஸ்தி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ஆடி ரன்சேர்த்த மும்பை அணி:

அடுத்து 86 ரன்கள் பின் தங்கிய நிலையில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அதில் முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 26 ரன்களும், ரோஹித் சர்மா 28 ரன்களும் எடுத்து நல்ல ஒரு தொடக்கத்தை மும்பை அணிக்குத் தந்தனர். அடுத்து ஹர்திக் தாமூர் 1 ரன்னுடனும், கேப்டன் அஜிங்கிய ரஹானே 16 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். மும்பை அணியின் ஷ்ரத்துல் தாக்கூர் நீடித்து ஆடி 119 ரன்கள் எடுத்தார்.

அதேபோல், மும்பை அணியைச் சேர்ந்த தனுஷ்கோடியான் 62 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் மும்பை அணி 74 ஓவர்களுக்கு 290 ரன்கள் எடுத்தது.

ஜம்மு காஷ்மீர் அணியின் அதிரடி:

இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் சேஸிங் செய்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணி, 49 ஓவரில் இலக்கை தாண்டி, வெறும் 5 ரன்கள் மட்டுமே இழந்து, 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று மும்பை அணியை வீழ்த்தியது.

குறிப்பாக , ஜம்மு காஷ்மீர் அணியின் சார்பில் தொடக்க வீரரான சுபம் கஜ்ரியா 55 ரன்களுடனும், யவீர் ஹசன் 24 ரன்களுடனும், விராந்த் சர்மா 38 ரன்களும், அப்துல் சமது 24 ரன்களும் எடுத்தனர். இதனால், இலக்கை விரைவில் எட்டி, மும்பை என்ற பலம்பொருந்திய அணியை, ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 42 முறை சாம்பியன் ஆன மும்பை அணி, ஜம்மு அணியிடம் ரஞ்சி டிராபியில் தோற்றது. 

ஐபிஎல் நட்சத்திரம் அப்துல் சமத் (20 பந்துகளில் 24 ரன்கள்) ஐந்து பவுண்டரிகளை அடித்தார். இறுதியில், இரண்டு பெரிய சிக்ஸர்களுடன் போட்டியை முடித்தார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்றபோதும் ஜம்மு-காஷ்மீர் வீரர்களைப் பாராட்டினார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.