ஐபிஎல் 2025: எனது வாழ்க்கையை மாற்றியுள்ளது ஐபிஎல் போட்டிகள் - டெல்லி ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம்
ஐபிஎல் தனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்றுக்கொண்டது தனது வாழ்க்கையை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025 தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ப்ளேஆஃப் போட்டிகளுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ப்ளேஆஃப்புக்கு எஞ்சியிருக்கும் நான்காவது இடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையே தான் இன்று போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன், டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டரான விப்ராஜ் நிகம், ஜியோஸ்டோருக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
