IPL 2025: Uncapped வீரர்கள் அபார ஆட்டம்.. இந்திய கிரிக்கெட் எதிர்காலத்துக்கு நல்லது - அனில் கும்ப்ளே பேச்சு
ஐியோ ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ‘பவர்ப்ளே’ சிறப்புத் தொடரில், டாடா ஐபிஎல் நிபுணர்கள் ஆகாஷ் சோப்ரா, அனில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா ஆகியோர், கடந்த சீசனின் முக்கிய மோதல்கள் பற்றியும், இந்த லீக் வீரர்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தது என்பது பற்றியும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கும் ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகள், வீரர்கள் குறித்து கிரிக்கெட் நிபுணர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வரும் பவர்ப்ளே என்ற சிறப்பு தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையடுத்து ஐியோ ஸ்டார்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, டாடா ஐபிஎல் 2024 சீசனில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் பற்றி பேசினார்:
டாடா ஐபிஎல் 2024 முழுவதும் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பெரிதும் நிரம்பியிருந்தது. இது எதிர்கால டி20 கிரிக்கெட்டின் ஒரு முன்னோட்டமாக அமைந்தது. எல்லோரும் வந்து சிக்ஸர்களை மழையாகப் பொழிந்தனர். 277 ரன்கள், அந்தத் தருணத்தில் அது சாத்தியமே இல்லை என அனைவருக்கும் தோன்றியது. ஆனால், சன்ரைசர்ஸ் அணி அதைச் சாதித்துக் காட்டியது.
சிக்ஸர் திருவிழாவாக மாறிய போட்டி
அந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஆகியோர் அந்த இலக்கை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தொடக்கத்தில் அந்த இலக்கை அடைய முடியாது என நினைத்தாலும், அவர்கள் ஆட்டத்தைத் தொடங்கியபோது ஒவ்வொரு பந்தும் சிக்ஸராக மாறியது. ஒரு கட்டத்தில், இந்த இலக்கை எட்ட முடியாது என நினைத்தவர்கள் கூட போட்டியின் திருப்பத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
அது ஒரு ‘சிக்ஸர் ஃபெஸ்டிவல்’ ஆகவே மாறியது. ஒருவர் ஆட்டமிழந்தாலும், அடுத்த வீரர் வந்து அதே வேகத்தைத் தொடர்ந்தார். ஒரு பேட்ஸ்மேன் அவுட்டானால், உடனே மற்றொருவர் வந்து அதேபோல விளையாடினார். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.
இந்த பரபரப்பான மோதல் சில வியப்பூட்டும் தருணங்களையும் உருவாக்கியது. ஆச்சரியமாக, அதிக சிக்ஸர்கள் அடித்த அணி தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் 20 சிக்ஸர்களையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 18 சிக்ஸர்களையும் அடித்தது.
மாற்றத்தை ஏற்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை
ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் கிரிக்கெட்டில் கூட இப்படியொரு ஸ்கோர் சாதாரணமாகக் கிடைக்கவில்லை. நம்மிடம் உலகக் கோப்பையும்இருந்தது. ஆனால், இந்த அளவிலான வேகம் காணப்படவில்லை. தற்போது, பேட்ஸ்மேன்கள் தங்கள் முழுத் திறமையை வெளிக்காட்ட தொடங்கியுள்ளனர். ஆடுகளங்கள் (பீல்டுகள்) நல்ல நிலையில் உள்ளன; ‘இம்பேக் வீரர்’ விதிமுறையால் அணிகளுக்கு தடையற்ற அணிக்கட்டமைப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால், உண்மையான மாற்றம் மனநிலையில்தான். திறனில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் மனநிலையில் ஏற்பட்ட மாறுதல் ஆட்டத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. இந்த தைரியமான அணுகுமுறையால்தான் டி20 கிரிக்கெட்டின் எதிர்காலம் புதிதாக உருவாகி வருகிறது.”
போட்டி அணுகுமுறை மாறியுள்ளது
ஐியோஸ்டாருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சுரேஷ் ரெய்னா டாடா ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை பற்றிக் கூறினார்:
"2008இல், நாங்கள் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் கெப்லர் வெசல்ஸ் உடன் ஒரு கூட்டம் நடத்தியிருந்தோம். அப்போது மேத்யூ ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரும் இருந்தனர். கெப்லர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். பவர்ப்ளேயில் 40 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் போதும். ஆனால், ஹெய்டன் ‘இல்லை, நாம் நேரடியாகத் தாக்குவோம். 6 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்கலாம்’ என்றார்.
அந்த நேரத்தில், ‘6 ஓவர்களில் எப்படி அந்த அளவுக்கு ரன்கள் எடுக்க முடியும்?’ என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால், மெதுவாக அணுகுமுறை மாறியது, நம்பிக்கை வளர்ந்தது, வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்தது. இன்று, டாடா ஐபிஎல் இளைய வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும் திறமையையும் வெளிப்படுத்துவதற்கு மிகப்பெரிய மேடையாக மாறியுள்ளது.”
Uncapped வீரர்கள் மேன்மை பெறுவது நல்லது
ஜியோஸ்டாருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அனில் கும்ப்ளே ஐபிஎல் தொடரில் இந்திய uncapped வீரர்களின் செயல்பாடு பற்றி பேசினார்:
"இந்த சீசனில் சில இந்திய uncapped வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அஷுடோஸ் ஷர்மா, நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், ரியான் பிராக், அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் சர்வதேச நட்சத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு திறமையைக் காட்டியுள்ளனர்.
இந்த uncapped வீரர்கள் மேல்நிலை பெறுவதைப் பார்ப்பது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது" என்றார்.

டாபிக்ஸ்