ஐபிஎல் 2025: SRH-க்கு ரன்களை வாரி வழங்கிய RR பவுலர்ஸ்.. சதம் விளாசி அசத்திய இஷான் கிஷன்!
ஐபிஎல் 2025: இந்த போட்டியில் இரு அணிகளும் தங்கள் ஆடும் லெவனில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுகின்றன. காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை. அவர் இம்பேக்ட் பிளேயராக இருக்கிறார்.

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியாக ஆடி 286 ரன்களை குவித்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்த ஸ்கோரை எட்டியது ஹைதராபாத் அணி. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் விளையாடவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இரண்டாவது ஸ்கோர் 286 ரன்கள் ஆகும். முதலிடத்திலும் ஹைதராபாத் அணியே உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 287 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இரு அணிகளும் தங்கள் ஆடும் லெவனில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுகின்றன.
இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் அல்லது பந்துவீச்சு முக்கியமல்ல என்று சுரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறினார். முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடியது. டிராவிஸ் ஹெட், அரை சதம் விளாசி அசத்தினார். 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் சதம் விளாசினார். நிதிஷ் குமார் ரெட்டி 30 ரன்களும், கிளாசன் 34 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
