ஐபிஎல் 2025: கில் நிதானம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. சன் ரைசர்ஸ்க்கு நான்காவது தொடர் தோல்வி! முன்னேறிய குஜராத்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: கில் நிதானம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. சன் ரைசர்ஸ்க்கு நான்காவது தொடர் தோல்வி! முன்னேறிய குஜராத்

ஐபிஎல் 2025: கில் நிதானம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. சன் ரைசர்ஸ்க்கு நான்காவது தொடர் தோல்வி! முன்னேறிய குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 06, 2025 11:22 PM IST

ஐபிஎல் 2025: கில் - வாஷிங்டன் ஜோடி அபாரமாக பேட் செய்து 90 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். பின்னர் ருதர்போர்டு கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்த குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் மூன்றாவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் முன்னேறியது.

கில் நிதானம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. சன் ரைசர்ஸ்க்கு நான்காவது தொடர் தோல்வி! முன்னேறிய குஜராத்
கில் நிதானம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. சன் ரைசர்ஸ்க்கு நான்காவது தொடர் தோல்வி! முன்னேறிய குஜராத் (PTI)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக 80 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய தோல்வியை தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் முந்தைய போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்று தொடர் தோல்விகளில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் குஜராத் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். சன் ரைசர்ஸ் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் 152 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் சேஸிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து, 20 பந்துகள் எஞ்சியிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

அதிகபட்சமாக சுப்ன் கில் 61, வாஷிங்டன் சுந்தர் 49, ருதர்போர்டு 35 ரன்கள் எடுத்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் முகமது ஷமி 2, பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கில் - வாஷிங்டன் சுந்தர் அபாரம்

குஜராத் அணியின் ஓபனராக பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் தமிழ்நாடு வீரரான சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக பேட் செய்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில் நிதானத்தை கடைப்பிடித்து ரன்கள் குவிக்க, வாஷிங்டன் சுந்தர் அதிரடி மோடில் பேட் செய்தார். இதனால் தேவைப்படும் ரன் ரேட் அதிகரிக்காமல் ஆட்டம் குஜராத் அணியின் கட்டுக்குள்ளே இருந்தது.

விரைவாக ரன்களை சேர்த்து வந்த சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில், துர்தஷ்டவசமாக அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். இதற்கிடையே 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் கில்

ருதர்போர்டு கேமியோ

50 ரன்களை கடந்த பின்னரும் அவசரம் காட்டாமல் பேட் செய்து வந்த கில். இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ருதர்போர்டு வந்த வேகத்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடித்து அணியின் ஸ்கோர் இலக்கை நோக்கி விரைவாக எடுத்து சென்றார். வேகமாக ரன்கள் அடித்த ருதர்போர்டு 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசிய ஷமி 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தொடர்ந்து 10வது இடத்தில் நீடிக்கிறது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.