ஐபிஎல் 2025: வீர தீர சூரனாக விளையாடிய ரகுவன்ஷி.. கேகேஆர் சரவெடி ஆட்டம்.. 200 ரன்கள் குவிப்பு
ஐபிஎல் 2025: கொல்கத்தாவில் உள்ள ஐபிஎல் 2025 தொடரின் 15வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2025: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரின் 15-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 201 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடவுள்ளது.
கொல்கத்தா அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டி காக் 1 ரன்னிலும், சுனில் நரேன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால், அடுத்து வந்த கேப்டன் ரஹானே நிதானமாக விளையாடினார். மறுபக்கம் இளம் வீரர் ரகுவன்ஷி அரை சதம் விளாசி தூள் கிளப்பினார். வீர தீர சூரனாக அடித்து தூள் கிளப்பினார் ரகுவன்ஷி. ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழக்க, வெங்கடேஷ் ஐயர் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 32 ரன்கள் எடுத்தார்.