ஐபிஎல் 2025: வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல் வெற்றி
ஐபிஎல் 2025: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு சுருண்டது.

ஐபிஎல் 2025: வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல் வெற்றி (AP)
ஐபிஎல் 2025: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேஸிங்கில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை எட்டி ஜெயித்தது. புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது ஐதராபாத் அணி. சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
சென்னை சார்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், கலீல், ஜடேஜா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.