ஐபிஎல் 2025: சிஎஸ்கே மோசமான பேட்டிங்.. தொடரும் சோதனை.. ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2025: எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ள எம்.எஸ்.தோனியின் போராடும் சிஎஸ்கே, எட்டு போட்டிகளில் ஆறு தோல்விகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ள எஸ்.ஆர்.எச் ஐ எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 19.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடவுள்ளது.
சென்னை அணியின் தொடக்க வீரர் ரஷீத் டக் அவுட்டாக, ஆயுஷ் மத்ரே 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 9 ரன்களிலும், ஜடேஜா 21 ரன்களிலும் நடையைக் கட்ட, பிரெவிஸ் நிதானமாக விளையாடி 42 ரன்கள் விளாசினார். அவரது விக்கெட்டை ஹர்ஷல் படேல் எடுத்தார். ஷிவம் துபே 12 ரன்கள், தோனி 6 ரன்கள், அன்சுல் 2 ரன்கள், நூர் அகமது 2 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தனர்.
எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ள எம்.எஸ்.தோனியின் போராடும் சிஎஸ்கே, எட்டு போட்டிகளில் ஆறு தோல்விகளுடன் ஒன்பதாவது இடத்தில் சமமான மோசமான நிலையில் உள்ள எஸ்.ஆர்.எச் அணியை எதிர்கொள்கிறது. எஸ்.ஆர்.எச் சார்பில், கமிந்து மெண்டிஸ் உள்ளார்.