ஐபிஎல் 2025: உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி.. பழிதீர்க்க காத்திருக்கும் ராஜஸ்தான்
ஐபிஎல் 2025: இரண்டு தொடர் தோல்வி, அதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி பழிதீர்க்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது. உள்ளுர் மைதானத்தில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருக்கும் ஆர்சிபி இன்றைய போட்டியில் முதல் வெற்றி கணக்கை தொடங்க போராடும் என எதிர்பார்க்கலாம்

ஐபிஎல் 2025 தொடரின் 42வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி அருகே வந்து தோல்வியுற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வெற்றி பறிபோனது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 2 ரன்னில் தோல்வியை தழுவியது. இரண்டு தொடர் தோல்விக்கு பிறகு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.
