ஐபிஎல் 2025: டாப் பார்மில் இரு அணிகள்.. டெல்லி வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுமா ஆர்சிபி? உத்தேச அணிகள்
ஐபிஎல் 2025: முந்தைய போட்டியில் உள்ளூர் மைதானத்தில் தோல்வியை பெற்றிருந்தாலும், அதிலிருந்து மீண்டு டெல்லி அணியின் வெற்றி பயணத்துக்கு ஆர்சிபி முட்டுக்கட்டை போடுமா என்கிற எதிர்பார்ப்பு இன்றைய போட்டியில் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 24வது போட்டி ஆர்சிபி - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் ஆர்சிபி 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆர்சிபி அணி முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்களில் அதன் உள்ளூர் மைதானமான வான்கடேவில் வைத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தியது. டெல்லி கேபிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்தியுள்ளது. இந்த இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த பாசிடிவ் மனநிலையோடு ஆர்சிபி - டெல்லி கேபிடல்ஸ் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன.
