ஐபிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால்.. ஜூரல் கேமியோ! ராஜஸ்தான் அணியை நன்கு கட்டுப்படுத்திய ஆர்சிபி பவுலர்கள்
ஐபிஎல் 2025: ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியில் மிரட்ட, ராஜஸ்தான் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் குவிக்க தவறினர். ஆர்சிபி பவுலர்கள் சிறப்பாக பந்து ராஜஸ்தான் அணியினரை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விடாமல் நன்கு கட்டுப்படுத்தினர்.

ஐபிஎல் 2025 தொடரின் 28வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே ஜெயப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு உள்ளூர் மைதானமான ஜெயப்பூரில் நடக்கிறது.
இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆர்சிபி அணி முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான பெங்களுருவில் வைத்து தோல்வியை தழுவியுள்ளது. தோல்வியிருந்து வெற்றிக்கு திரும்பும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.
